இதுக்கு பெயர் விபச்சாரம் தான் - ஸ்ரீரெட்டியை தாக்கிப் பேசிய வாராகி

சிவா மனசுல புஷ்பா படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வாராகி, நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ஸ்ரீரெட்டி செய்வது விபச்சாரம் தான் என்று தாக்கிப் பேசினார். #Srireddy #Varaki
இதுக்கு பெயர் விபச்சாரம் தான் - ஸ்ரீரெட்டியை தாக்கிப் பேசிய வாராகி
Published on

வாராகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டதாக வாராகி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வாராகி, 

படத்தின் பெயரை மாற்ற சொல்லி தணிக்கை குழு வற்புறுத்தியதாக கூறினார். சென்சார் போர்டு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. என் படத்தின் பெயரும், அதில் வரும் கதாபாத்திரங்களும் தான் பிரச்சனை என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று சென்சார் போர்டுக்கு கேள்வி எழுப்பினார். அந்த மாதிரி பெயராக இருந்தால் மாற்றலாம். பெயரை மாற்றுவதற்கான சரியான காரணமும் சொல்லவில்லை. 

ஸ்ரீரெட்டி மீது புகார் கூறியது பற்றி கேட்டதற்கு வாராகி கூறியதாவது,

சினிமா துறையே ரொம்ப நலிந்து கிடக்கிறது. சமூக சீர்த்திருத்த கருத்துக்களை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். லாரன்ஸ் யார் என்பது நமக்கு தெரியும், மக்களட, ஊனமுற்றோர் என லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் அனைத்திலும் உடன்பட்டு தான் சென்றிருக்கிறார். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏமாறி போயிருக்கலாம். பலமுறை ஏமாறினால் அதுக்கு பெயர் என்ன? அது விபச்சாரம் என்று தான் நான் சொல்கிறேன். அதனால் தான் விபச்சார வழக்கில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளேன். #Srireddy #Varaki

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com