அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி

பிரபல பைனான்சியர் அன்பு செழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி டுவிட் செய்துள்ளார்.
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
Published on

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், சசிகுமார், சுசிந்திரன் உள்ளிட்ட பலர் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சீனு ராமசாமி பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என்று கூறியிருக்கிறார். இது குறித்து சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே...’ என்று பதிவு செய்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com