சிவகார்த்திகேயனை தொடர்ந்து விதிமதி உல்டாவில் இணைந்த ரஞ்சித்

விதிமதி உல்டா படத்தில் இடம் பெற்ற ‘தாறுமாறா’ பாடல் சிவகார்த்திகேயன் வெளியிட்டதை தொடர்ந்து, அடுத்ததாக ‘காலா’ படத்தின் இயக்குனர் ரஞ்சித் இப்படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார்.
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விதிமதி உல்டாவில் இணைந்த ரஞ்சித்
Published on
‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார்.

இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ‘கபாலி’, ‘காலா’ படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், தனது டுவிட்டர் பக்கத்தில் அக்டோபர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்.

‘விதிமதி உல்டா’ படத்தில் ரமீஸ் ராஜா நாயகனாகவும், ஜனனி ஐயர் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com