ராமாயண படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி

படத்தின் ப்ரீ-கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் பகுதிகள் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Director Rajamouli
Published on: 

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட 'ராமாயணா' (பாகம் 1) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் மிகச்சிறந்த விமர்சனத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

திரைப்படத்தைப் பார்த்த பிறகு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

பிரம்மாண்டமான காட்சி அனுபவம்

ராமாயணா இப்படத்தின் பிரம்மாண்ட அளவும், பெரிய திரையில் இதன் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதம் ஆக உள்ளன" என்று பாராட்டியுள்ளார்

மேலும் திரைப்படத்தில் ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூரின் நடிப்பு, குறிப்பாக வனவாசம் பகுதிக்கு பிறகு அமைதியாகவும் கம்பீரமாகவும் இருந்ததாகவும், ராவணனாக வரும் யஷ் மிரட்டலான நடிப்பையும், சீதையாக வரும் சாய் பல்லவி நேர்த்தியான அழகையும்வெளிப்படுத்தியுள்ளனர்" என முதன்மைக் கதாபாத்திரங்களை வாழ்த்தியுள்ளார்.

படத்தின் ப்ரீ-கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் பகுதிகள் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இவ்வளவு பெரிய லட்சியக் கதையை மிக அழகாகத் திரைக்குக் கொண்டு வந்ததற்காகத் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திரைப்படத்தின் டிரைலர் வெளியான போதும் ராமாயணம் என்பது ஒவ்வொரு இந்தியக் கதைசொல்லியும் திரையில் சொல்ல நினைக்கும் ஒரு காவியம்" என்று எக்ஸ் தளத்தில் ராஜமௌலி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X