பிரியா வாரியருக்கு இயக்குநர் விதித்த தடை

‘ஒரு அடார் லவ்’ படத்தில் இருந்து வெளியான ‘மாணிக்க மலராய பூவி’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பிரியா வாரியருக்கு படத்தின் இயக்குநர் தடை விதித்துள்ளாராம். #PriyaVarrier #OruAdaarLove
பிரியா வாரியருக்கு இயக்குநர் விதித்த தடை
Published on

ஓமர் லூலூ இயக்கி வரும் மலையாள படம் ‘ஒரு அடார் லவ்’ இந்த படத்தின் மூலம் நாயகி ஆகி இருப்பவர் பிரியா வாரியர்.

இந்த படத்தின் ஒரு பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் பிரியா வாரியர் கண்ஜாடை காட்டுவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இதை பார்த்தவர்கள் அனைவருடைய மனதையும் கவர்ந்த பிரியா ஒரு சில நாட்களில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்.

இதனால் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு போனிலும், இணைய தளங்களிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து குவிக்கின்றன. வாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இதனால் பிரியா தனது போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டார்.

இந்த நிலையில், அவர் நடித்து வரும் படம் பற்றி ஒரு டி.வி.க்கு பேட்டி அளித்தார். இதை பார்த்த இயக்குனர் பிரியாவிடம், ‘ஒரு அடார் லவ்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் வரை இனி யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது” என்று தடை விதித்துள்ளார்.

படம் திரைக்கு வரும் முன்பு ஒரு கண் அசைவில் பரபரப்பு ஏற்படுத்திய பிரியா வாரியர் மீது, திரை உலக பிரபலங்களின் பார்வை விழுந்திருக்கிறது. எனவே, தமிழ் படங்களிலும் அவர் கால் பதிப்பார் என்று கூறப்படுகிறது. #PriyaVarrier #OruAdaarLove

X

Maalai Malar
www.maalaimalar.com