இதுபோன்ற சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும் - 96 படக்குழுவை பாராட்டிய சேரன்

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் சேரன் ஆட்டோகிராப் படத்தை 96 படத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். #96TheMovie
இதுபோன்ற சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும் - 96 படக்குழுவை பாராட்டிய சேரன்
Published on

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 90-களில் பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படக்குழுவை பாராட்டி உள்ளார்.

முன்னதாக 96 படத்தையும், சேரனின் ஆட்ரோகிராப் படத்தையும் ஒப்பிட்டு சிலர் பேசினர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும். #96TheMovie #Cheran

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com