விஜய் சேதுபதி எப்படி பட்டவர்: மனம் திறந்த இயக்குனர் ஆறுமுக குமார்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குன ஆறுமுக குமார், விஜய் சேதுபதி எப்படி பட்டவர் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
விஜய் சேதுபதி எப்படி பட்டவர்: மனம் திறந்த இயக்குனர் ஆறுமுக குமார்
Published on

வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் இந்திய சினிமாவிலேயே சிலர் தான். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' நாளை பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை '7சி'எஸ் என்ட்ர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் அமே நாராயணா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' குறித்து அதன் இயக்குனர் ஆறுமுக குமார் பேசுகையில், ''இது ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். இந்த கதை களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது பெஸ்ட்டை தந்துள்ளனர். விஜய் சேதுபதியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவமாகும். அவர் எவ்வளவு அருமையான நடிகர் மற்றும் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை. தனது அசுர நடிப்பால் இந்த கதையை வேற லெவெலிற்கு அவர் உயர்த்தியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். அதே போல் தான் காயத்ரி மற்றும் நிஹாரிகாவில் கதாபாத்திரங்கள் மற்றும் இவர்களின் நடிப்பும். ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கத்தில் எங்கள் படத்தை கண்டு ரசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்றார்.

இந்த படத்தை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பாக சத்தியமூர்த்தி தமிழகமெங்கும் முன்னூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com