பிறந்தநாளில் இணையத்தை கலக்கிய துருவ் விக்ரம்

விக்ரமின் மகனான துருவ் விக்ரமின் பிறந்தநாளான நேற்று விக்ரம் ரசிகர்கள் துருவ்வுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் துருவ்வை டிரெண்டாக்கினர்.
பிறந்தநாளில் இணையத்தை கலக்கிய துருவ் விக்ரம்
Published on

அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அக்டோபர் 15 முதல் ஹரி இயக்கத்தில் `சாமி-2' படத்திலும் நடிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அவரது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வந்தனர்.

துருவ் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அதன் முன்னோட்டமாகவே சமீபத்தில் அவரது டப்மாஷ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியதுடன் அனைத்து தரப்பினரிமும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com