இடை அழகை வலைதளத்தில் சிதறவிட்ட திஷா பதானி

‘சங்கமித்ரா’ பிரம்மாண்ட படத்தில் நடிக்கவிருக்கும் திஷா பதானி தனது இடை அகு தெரியும்படியான புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #DishaPatani
இடை அழகை வலைதளத்தில் சிதறவிட்ட திஷா பதானி
Published on

‘தோனி’ படம் மூலம் பிரபலம் ஆனவர் இந்தி நடிகை திஷா பதானி. இவர் தனது காதலர் ‌ஷராப்புடன் இணைந்து நடித்த ‘பாகி-2’ படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு, அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது காதலரைப் போல ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார். இதனால் உடலை ஒல்லியாகவும், கட்டு மஸ்தாகவும் வைத்திருக்கிறார்.

கடும் உடற்பயிற்சி காரணமாக, தனது இடை அழகை மெருகேற்றி உள்ளார். ரசிகர்களுக்கு தெரிவிக்க கட்டுக்கோப்புடன் மெலிந்து அழகாக இருக்கும் வயிறு இடுப்பு அமைந்த ‘இடை’யை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெருமைப்பட்டிருக்கிறார். திஷா பதானியின் இந்த படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், ‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பாராட்டும் கிடைத்துள்ளதால் திஷா பதானி மகிழ்ச்சி அடைந்துள்ளார். #DishaPatani

X

Maalai Malar
www.maalaimalar.com