தில்லுக்கு துட்டு 2

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
தில்லுக்கு துட்டு 2
Published on

ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தில்லுக்கு துட்டு 2'.

சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷிர்தா சிவதாஸ் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், மாஸ்டர் சிவசங்கர், மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை - ஷபீர், ஒளிப்பதிவு - திப்பாக்குமார் பதி, பாடல்கள் - அருண்பாரதி & கானா வினோத், படத்தொகுப்பு - மாதவன், கலை இயக்கம் - ஏ.ஆர்.மோகன், சண்டைப்பயிற்சியாளர் - ஹரி தினேஸ், நடனம் - சாண்டி, ஆடை வடிவமைப்பு - ஆர்.பிரவீன்ராஜ், இணை தயாரிப்பு - சி.ரமேஷ்குமார், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பு - ஹாண்ட்மேட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் - என்.சந்தானம், எழுத்து, இயக்கம் - ராம்பாலா.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது,

‘‘ பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.

நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன். ‘தில்லுக்கு துட்டு 2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’ இவ்வாறு சந்தானம் கூறினார். 

படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com