நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும் - வைரலாகும் பட்டாஸ் டிரைலர்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ்
தனுஷ்
Published on

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவலை படக்குழு நேற்று மாலை திடீரென அறிவித்தது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறும் ”நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும்”, ”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 16-ந் தேதி ரிலீசாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com