ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறியுள்ள இயக்குநர் கவுதம் மேனன், படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். #ENPT #Dhanush
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
Published on

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார். படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் மேனன், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி. இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிகுமார், தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். 

அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே படங்கள் தீபாவளி ரேசில் இருந்து தள்ளிப்போனதால், விஜய்யின் சர்கார் படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com