கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. #ENPT #Dhanush
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
Published on

விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். 

இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில காரணங்களால் படம் முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சமரசமாகித் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, ‘டஃப்பி’ சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்கான உங்களது (சசிக்குமார்) பங்களிப்பை பாராட்டத்தான் வேண்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷ் அண்ணன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சசிகுமார் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோ‌ஷன் பிக்சர்ஸ் பி.மதனுடன் இணைந்து கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com