அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட இயக்குநர் தனுஷ் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தில் காமெடியில் பிரபலமான ஒருவரை நாயகனாக அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்
Published on

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளுடன் உயர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது `எனை நோக்கி பாயும் தோட்டா', `வடசென்னை', `மாரி-2' படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

அதேநேரத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தனுஷ் அடுத்ததாக மலையாள படம் ஒன்றை ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் பிரபல தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் கலக்கிய தீனாவை நாயகனாக தனுஷ் அறிமுகம் செய்யவிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. 

தீனா ஏற்கனவே, தனுஷ் இயக்கத்தில் `பவர்பாண்டி' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவரை ஹீரோவாக தனுஷ் அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com