ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். #shahrukhkhan #Dhanush #Zero
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
Published on

இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com