ஜீவா, அருள்நிதி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அருள்நிதி, ஜீவா
அருள்நிதி, ஜீவா
Published on

ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளனர். 

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். அதன்படி இப்படத்திற்கு 'களத்தில் சந்திப்போம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com