அஜித் பெயரை படத்தலைப்பாக்கிய தனுஷ்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட தனுஷ் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்திற்கு அஜித் பெயரை தலைப்பாக்கி இருக்கிறார்.
அஜித் பெயரை படத்தலைப்பாக்கிய தனுஷ்
Published on

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளுடன் உயர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது `எனை நோக்கி பாயும் தோட்டா', `வடசென்னை', `மாரி-2' படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

அதேநேரத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தனுஷ் அடுத்ததாக மலையாளத்தில் ஹிட்டடித்த, கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். அந்த படத்திற்கு அஜித் ப்ரெம் அருப்புக்கோட்டை என்று தலைப்பு வைத்துள்ளனர். 

பிரபல தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் கலக்கிய தீனா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுமாகிறார். இவருடன் மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்கட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் துவங்கியது.

தீனா ஏற்கனவே, தனுஷ் இயக்கத்தில் `பவர்பாண்டி' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com