கூவையை வெளியிடும் கவுதம் மேனன்

இயக்குநர் கவுதம் மேனன் ஆரம்பித்திருக்கும் ஒன்ட்ராகா ஒரிஜினல்ஸ் சேனலில் இருந்து அடுத்ததாக கூவை என்ற சிங்கிள் ஒன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூவையை வெளியிடும் கவுதம் மேனன்
Published on

இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா', விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்யதை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், கவுதம் மேனன் தற்போது ஒன்ராகா ஒரிஜினல்ஸ் என்ற சேனலை தொடங்கியிருக்கிறார். இதில் இன்டிபென்டன்ட் மியூசிக் பாடல்களை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதன் படி அவர் கூவை என்ற பாடல் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பொங்கல் தினத்தை முன்னிட்டு 14-ம் தேதி வெளியிட இருக்கிறார் கவுதம் மேனன்.

கூவை என்பதற்கு ஆந்தை என்று பொருள். ஆக்கங் கெட்ட கூவை என்று ஒருவரை திட்டுவதற்கு உபயோகப்படும் வார்த்தை. இதில் கூவை என்ற வார்த்தையை வைத்து இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com