கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தை திரையிடுவதற்காக நடிகர் தனுஷ் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றிருக்கிறார். #Dhanush #Cannes2018
கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
Published on

தனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. அதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளனர். 

ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரும்பாலான நாடுகளில் சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. 

வருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக இருக்கிறது. அதே வாரத்தில் இந்தியாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #Cannes2018 #FakirAtCannes

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com