டூப் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சியில் நடித்த தன்ஷிகா

கபாலி படத்தில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் டூப் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சியில் நடித்துள்ளார். #Dhanhsika
டூப் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சியில் நடித்த தன்ஷிகா
Published on

பிரபல கன்னட இயக்குநர் சுனில்குமார் தேசாய் இயக்கும் ‘உடேகர்ஷா’ என்ற மும்மொழி திரைப்படத்தில் தன்ஷிகா ஆக்‌‌ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்றது.

அதில் தன்ஷிகா ஒரு மாடி வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. டூப் வைத்து காட்சியை எடுக்க ஒரு சண்டை கலைஞருக்கு டூப் போட்டிருந்தார்கள். ஆனால், தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது தன்ஷிகா போன்று இல்லை. 

இதனால், தானே துணிந்து அந்தரத்தில் தொங்கி அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் தன்ஷிகா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com