காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்

ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றி உள்ளார்.
தனஞ்செயன்
தனஞ்செயன்
Published on

பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ஜி. தனஞ்செயன் கூறியதாவது “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும்  விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக விளங்கும் என்று தோன்றியது. 

மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் ஆர்.டி.எம். இயக்கத்தில் எதார்த்தமான பாணியில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஒரு நொடி அசையவிடாமல் கட்டிப்போடும் தன்மையில் அசத்தலாக படத்தை தந்துள்ளார் இயக்குநர். இத்திரைப்படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com