தாதா 87

கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தாதா 87
Published on

கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, நாயகனாக ஆனந்த்பாண்டி, நாயகிகளாக ஜெனி பல்லவி, அனுலாவண்யா நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜனகராஜ், மனோஜ்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-ராஜபாண்டி, இசை-லியாண்டர் லீ மார்ட்டி, படத்தொகுப்பு-சுதா, கலை-நந்தா, ஸ்டண்ட்- விஜய் ஜாக்குவார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம்- விஜய் ஸ்ரீஜி.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

“சாருஹாசன் இதில் வடசென்னை தாதாவாக நடித்து இருக்கிறார். அவருக்கு இப்போது வயது 87. எனவே இந்த படத்துக்கு ‘தாதா 87’ என்று பெயர் வைத்து இருக்கிறோம். குழந்தைகள் பாலியல் கொடுமை செய்யப்படுவதற்கு எதிராக களம் இறங்கும் தாதாவாக சாருஹாசன் வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் பாட்டி சரோஜா நடிக்கிறார்.

உடல் நலகுறைவு, வயது எதையும் பார்க்காமல் அர்ப்பண உணர்வுடன் சாருஹாசன் நடித்தார். இளம் நாயகனாக ஆனந்த்பாண்டி நடித்து இருக்கிறார். இவருடன் 2 நாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவருடைய காதல் கதையும், சாருஹாசனின் தாதா கதையும் இணைந்து பயணிக்கும்.

‘தாதா 87’ படத்தில் இடம் பெற்ற ‘ஆறடி ஆண்டவன்...’ பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட வேண்டியது உள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது இருக்கும். ஜனவரியில் ‘தாதா 87’ திரைக்கு வரும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com