மாமியாராக மாறிய தேவயானி

பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி தற்போது மாமியாராக மாறி இருக்கிறார். #KalavaniMappillai #Devayani
மாமியாராக மாறிய தேவயானி
Published on

அம்மா வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த தேவயானி ஒரு படத்தில் தினேசுக்கு மாமியாராக நடிக்கிறார். மூத்த இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் காந்தி மாணிக்கவாசம் கூறுகையில்,

‘என் அப்பா மணிவாசகம் மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப்பார். அதன்படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித்தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார். முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com