

ரேணிகுண்டா புகழ் பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தான்யா நடிக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். பசுபதி, சரத் லோகிதஸ்வா, சிங்கம் புலி, ரேணுகா, கிஷோர், காவேரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் ‘கருப்பன்’ படம் உருவாகி வருகிறது. ஒரு மாடுபிடி வீரராக விஜய் சேதுபதி ஜல்லிகட்டு மாட்டை அடக்கும்படியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், டி.இமான் இசையில் பாடல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக டி.இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘கருப்பன்’ படத்திற்கு பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஷக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1-ல் விஜய் சேதுபதியின் `புரியாத புதிர்' வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கருப்பன்’ படத்தின் பாடல்கள், `புரியாத புதிர்' ரிலீஸ் என விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அடுத்தத்து விருந்து காத்திருக்கிறது.