சந்தானம் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக உயர்ந்திருக்கும் சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும் `சர்வர் சுந்தரம்' படத்திற்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.
சந்தானம் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி
Published on

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக உயர்ந்தவர் சந்தானம். காமெடியனாக அவர் வலம் வந்த போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் நடிப்பில் தற்போது `சர்வர் சுந்தரம்' படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தில்லுக்கு துட்டு படத்தில் அவருடன் இணைந்து நடித்த வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் இப்படம், சமீபத்தில் தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கைக்குழு படத்திற்கு `யு' சான்றிதழை வழங்கி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனை படக்குழு முதல் வெற்றியாகவே கருதுகிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுதவிர சந்தானம் `மன்னவன் வந்தானடி', `சக்க போடு போடு ராஜா', `ஓடி ஓடி உழைக்கனும்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com