மீண்டும் கவுதம் மேனன் படத்தில் இளம் இசையமைப்பாளர்

இயக்குனர் கவுதம் மேனன் அடுத்ததாக இயக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார்.
கவுதம் மேனன்
கவுதம் மேனன்
Published on

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இதுவரை முன்னணி இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்த கவுதம் மேனன், இப்படத்திற்கு தர்புகா சிவா எனும் இளம் இசையமைப்பாளரை இசையமைக்க வைத்துள்ளார். 

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தான் அடுத்ததாக இயக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கும் தர்புகா சிவாவையே இசையமைக்க வைத்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். பப்பி படத்தில் நடித்த வருண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com