கபாலி பாணியில் தர்பார் புரமோஷன்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தர்பார் பட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள விமானத்தின் புகைப்படம்
தர்பார் பட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள விமானத்தின் புகைப்படம்
Published on

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழைப்போலவே தெலுங்கு, இந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். 

இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தின் போஸ்டர்களை விமானங்களில் ஒட்டியுள்ளனர். இதேபோல் ஏற்கனவே கபாலி படம் ரிலீசான போது விமானத்தில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே பாணியில் தர்பார் படத்திற்கும் புரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விமானம் சென்னையில் இருந்து ஐதராபாத் வரை இயக்கப்படுகிறது. தர்பார் போஸ்டருடன் கூடிய விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com