

இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட இந்திய படங்களின் சாதனையை இது முறியடித்து வசூல் ரூ.500 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ தான் சாதனை படைத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு ‘யுவர்நேம்’ என்ற ஜப்பான் மொழிப்படம் 575.87 மில்லியன் யென் வசூலித்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது ‘தங்கல்’ அந்த வசூல் சாதனையை கடந்து இருக்கிறது.
தற்போது வரை ‘தங்கல்’ ரூ.740 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. சீனாவில் பல்வேறு திரையரங்குகளில் ‘தங்கல்’ படம் 68 ஆயிரம் காட்சிகள் கடந்து இருக்கிறது. 11 மில்லியன் மக்கள் இதுவரை இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள்.
`தங்கல்' படத்தின் வசூல் சாதனையை அடுத்து, `பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.