ஜெயம் ரவி ரசிகர்களுக்கான கவுண்ட்டவுன் தொடக்கம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `வனமகன்' ஜி.எஸ்.டி பிரச்சனையால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டாலும், தற்போது ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவி ரசிகர்களுக்கான கவுண்ட்டவுன் தொடக்கம்
Published on

`வனமகன்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்' படத்தில் நடித்து வருகிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு சக்தி சவுந்தர் ராஜன் - ஜெயம் ரவி - டி.இமான் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு  மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக `ஒருநாள் கூத்து' பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ்வும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com