

இதில் நிரூபர்களின் கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளிக்கும் போது,
சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா' படம் போட்டியாக இருக்கும் என்றார். விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 காமெடியன்கள் சேர்ந்த நடித்திருக்கும் இந்த படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் விமர்சனத்துக்கு நாளை நடைபெறும் `சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பதில் அளிப்பார்.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார்.