அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்

காமெடி நடிகர் விவேக் தனக்கு அஜித் பரிசு கொடுத்தாக கூறப்படும் கடிகாரத்தில் ஒரு பிழை இருப்பதாக தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்
Published on

அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் அழகை பார்த்து வியந்துபோன விவேக், என்றாவது தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்குவேன் என்று அஜித்திடம் கூறினாராம்.

உடனே அஜித் சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த வாட்சை கழற்றி விவேக்கில் கையில் கொடுத்துவிட்டாராம். இதைப் பார்த்து விவேக் எதுவும் பேசமுடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், அந்த செய்தியில் கூறியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால், அது இப்போது பெரிய விஷயமில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com