காதல் திருமணம் செய்கிறாரா சதீஷ்? - பெண் வீட்டார் விளக்கம்

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் பற்றிய வதந்திக்கு பெண் வீட்டார் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
சதீஷ்
சதீஷ்
Published on

காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். எதிர் நீச்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சதீசுக்கும் ‘சிக்சர்’பட இயக்குனரின் தங்கை சிந்துவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. ‘சிக்சர்’ படத்தில் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால், காதல் திருமணம் என்று பலரும் செய்திகள் வெளியிட்டு வந்தனர். சதீஷ் - சிந்து திருமணம் டிசம்பர் 11-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இணையத்தில் சதீஷ் காதல் திருமணம் என்று செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், ‘சிக்சர்’ இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இது உண்மையான நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என தெரிவித்துள்ளார். சதீஷ் - சிந்து இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவால் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. 

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் திருமண அழைப்பிதழை கொடுத்தார் சதீஷ். தற்போது திரையுலக நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com