”துரோகம் பழகு” படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..!

திரைப்பட குழுவினரின் கடின உழைப்பிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
Dhrogam Pazhagu
Published on

துரோகம் பழகு

சீயோன் ராஜா இயக்கத்தில் ,சி. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துரோகம் பழகு .

முதல் பார்வை

படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், ஆர்.கே. செல்வமணி, நட்டி நட்ராஜ், ராம்கி, பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டிருந்தனர்.

படத்தின் முதல் பார்வை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பார்வையானது தற்போது வெளியாகி உள்ளது.

இரண்டாவது பார்வை

துரோகம் பழகு திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

பாராட்டு

சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார்.

மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

விரைவில்

துரோகம் பழகு திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com