

பிரேமலு, ஆலப்புழா ஜிம்கானா, லோகா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து மாலிவுட்டின் வளர்த்து வரும் கதாநாயகனாக தடம் பதித்தவர் நஸ்லன்.
அபினவ் சுந்தர் இயக்கத்தில் 'மாலிவுட் டைம்ஸ்' என்ற புதிய படத்தில் நஸ்லன் நாயகனாக நடித்துள்ளார். மாலிவுட் (மலையாள) சினிமாவை சுற்றி இப்படத்தின் கதைக்களம் நகர்கிறது.
ஆஷிக் உஸ்மான் தயாரித்துள்ள 'மாலிவுட் டைம்ஸ்' ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன் நடித்த ‘ஐ அம் காதலன்’ படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
கலித் ரகுமான் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘மட்டஞ்சேரி மாபியா’ படத்திலும் நஸ்லன் நடிக்கவிருக்கிறார்.