கின்னஸ் சாதனை படைத்த அட்லீயின் ‘ராக்கா’ படம்!

படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை படைத்த அட்லீயின் ‘ராக்கா’ படம்!
Published on

ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு, நிகழ்நேர மோஷன் - கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம்பிடித்ததற்காக ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில், ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின் உடல் அசைவுகள் மற்றும் முக பாவனைகளை நிகழ்நேர மோஷன்-கேப்சர் (Real-time Motion Capture) தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே காட்சியில் பதிவு செய்து இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

‘ஜவான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி இயக்கும் அடுத்த பெரிய திரைப்படம் ராக்கா. இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான அறிவியல் புனைகதை படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com