`நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க பேட்ரிக் சார்' - வேட்டையன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
`நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க பேட்ரிக் சார்' - வேட்டையன் படத்தின்  நீக்கப்பட்ட  காட்சி வெளியீடு
Published on

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேட்டையன் திரைப்படம் . இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் ரஜினிகாந்த வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பலையால் நிரம்புகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் , பகத் பாசிலைப் பார்த்து "பேட்ரிக் சார் நீங்க ரொம்ப நல்லா நடிகிறீங்க என்று சொல்ல அதற்கு பகத் பாசில் உங்களவிடவா என்று சொல்ல மிக நகைச்சுவையாக அமைந்துள்ளது. இந்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com