You are a rock solid performer - சூர்யாவை புகழ்ந்த திஷா பதானி

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருப்பவர் திஷா பதானி.கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
You are a rock solid performer - சூர்யாவை புகழ்ந்த திஷா பதானி
Published on

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருப்பவர் திஷா பதானி.

தொடர்ந்து இந்தி தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி திரை உலகில் இவரது நடிப்பில் சமீபத்தில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் திசா பதானி.

கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதில் படக்குழு மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் திஷா பதானி சிகப்பு நிற புடவையில் அழகாக வந்து இருந்தார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தையும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவாவுக்கு நன்றியை தெரிவித்தார்.

அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் திசா பதானி சில தினங்களாக தொடர்ந்து அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் நீச்சல் உடையில் நின்றபடி எடுத்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com