சிவாண்ணாவை சந்தித்த யாஷ் - வெளியான மாஸ் வீடியோ

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார். தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிவாண்ணாவை சந்தித்த யாஷ் - வெளியான மாஸ் வீடியோ
Published on

 கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.

தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் தொடங்கியது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

இப்படம் கார்த்திக் அத்வைத் இயக்கும் முதல் கன்னட திரைப்படமாகும். இவர் இதற்கு முன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யாஷ் சிவ ராஜ்குமாரை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் அங்கு பேசினர். இவர்கள் சந்தித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com