விஜய் கட்சியில் இணைகிறேனா? பதிலளித்த விமல்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தளபதியுடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
விஜய் கட்சியில் இணைகிறேனா? பதிலளித்த விமல்
Published on

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல். இவர் விஜய் நடித்த கில்லி, குருவி படங்களிலும் அஜித் குமார் நடித்த கிரீடம் படத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. பின்னர், இவர் பல குறைந்த பட்ஜெட் தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது போஸ் வெங்கட் தயாரிப்பில் நடிகர் விமல் 'சார்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணி சார்பில் சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் எனது தம்பிகளுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இவர்கள் என்னை அன்பாக அழைத்தார்கள், அதுமட்டுமின்றி தளபதி அவர்களின் கில்லி படம் மூலம் அறிமுகமானேன். தளபதியுடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பாசத்திலும், தம்பிகளின் அழைப்பின் பேரிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கட்சியில் இணைவது குறித்து தற்போதைக்கு எந்த யோசனையும் இல்லை.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் இறப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்களையும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com