"நாளை நான் இருப்பேனோ இல்லையோ.." 4 நாட்கள் முன் கடைசியாக நானா படேகர் பொதுவெளியில் பேசிய வார்த்தைகள்

புனேவில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
நானா படேகர்
Published on: 
Summary

நானா படேகர் இன்று உயிரிழந்த நிலையில் 4 நாட்கள் முன் அவர் பேசிய வார்த்தைகள் பலரை கண் கலங்க வைத்துள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த நடிகர் நானா படேகர் இன்று அதிகாலை கோவாவில் உள்ள தனது வீட்டில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

திடீர் மரணம்

75 வயதான நானா படேகர் ஆரோக்யத்துடனேயே பொது வெளியில் தோன்றி வந்த நிலையில் அவரின் இந்த திடீர் மரணம் யாரும் எதிர்பார்க்காத துர்சம்பவமாகியுள்ளது.

குறிப்பாக கடைசியாக அவர் கடந்த அக்டோபர் 4 அன்று கோவாவின் டோனா பவுலாவில் நடைபெற்ற 'சாம்ராட் கிளப் இன்டர்நேஷனல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பொதுவெளியில் காணப்பட்டார்.

பேச்சு

அந்த நிகழ்வில் மராத்தி மொழியில் பேசிய அவர், "நாம் அனைவரும் ஒரு நாள் இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும். நாளை நான் இங்கு இருப்பேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த இலக்கை அடைய வேண்டும். ஆனால் அது நடப்பதற்கு முன்பு, நான் விரும்பியதை என்னால் செய்ய முடியுமா என்று என்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

அரசு மரியாதை

இந்த வார்த்தைகளைக் கூறி வெறும் 4 நாட்களுக்குப் பிறகு அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்ததால், அவரது ரசிகர்கள் மேலும் வருத்தமடைந்துள்ளனர்.

அவரது உடல் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா கொண்டுவரப்பட உள்ளது. அங்கு புனேவில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

திரை வாழ்வு

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008 இல் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தார் நானா படேகர்.

கடைசியாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான காலா படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை நானா படேகர் ஈர்த்திருந்தார்.

மகாராஷ்டிராவின் ராய்கட்டை பூர்வீகமாக கொண்ட இவரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர் ஆகும்.

பிரதானமாக பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். தனது நடிப்புத் திறமைக்காக அதிகம் பாராட்டப்படும் இவர் இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

படேகர், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். மேலும் இந்திய ராணுவத்திலும் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

3 தேசிய விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள் பெற்ற இவருக்கு 2013 இல் இந்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com