ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தவறிய "ஃப்ரீடம்"- "டூரிஸ்ட் பேமிலி"-ஐ மிஞ்சுமா?

நடிகர் சசிகுமார் நடித்துள்ள ஃபிரீடம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.ஃப்ரீடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தவறிய "ஃப்ரீடம்"- "டூரிஸ்ட் பேமிலி"-ஐ மிஞ்சுமா?
Published on

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றத் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை அபிஷன் ஜீவந்த் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த டூர்ஸ்ட் பேமிலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் சசிகுமார் நடித்துள்ள ஃபிரீடம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

ஃப்ரீடம் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மாலவிகா அவினாஷ், சரவணன், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சசிகுமார் நடித்து வெளியாக இருக்கும் போதிலும் ஃபிரீடம் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் படம் குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இல்லாத நிலையே நிலவுவதாக தெரிகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை வெளியானது. இருப்பினும், ப்ரீடம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கவனம் பெறாததால், படம் வரவேற்பு பெறுமா என்பது திரைப்படம் வெளியான பிறகு தான் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com