"வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்: என்னை மீட்டது ஒன்ஸ்மோர் தான்!" - நடிகை அதிதி ஷங்கர்!

'ஹிருதயம்', 'குஷி' பட புகழ் ஹேசம் அப்துல் வகாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 Aditi Shankar
Published on

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஒன்ஸ்மோர்'. மில்லியனர் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'ஹிருதயம்', 'குஷி' பட புகழ் ஹேசம் அப்துல் வகாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் நாயகி அதிதி ஷங்கர் பேசிய உருக்கமான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாழ்க்கையில் ஒருகட்டத்தில் உடைந்து போயிருந்தேன்!

மேடையில் நடிகை அதிதி ஷங்கர் பேசுகையில், "ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு கடினமான காலகட்டம் வரும். அப்படி என் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நான் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தேன்.

என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்த போது அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது அதுதான் "ஒன்ஸ்மோர்".

இந்த கதையை கேட்டதும் எனக்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது போல் இருந்தது. இந்த படம் தான் என்னை அந்த இடிந்த நிலையில் இருந்து மீட்டெடுத்தது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

வில்லன் To லவ்வர் பாய் - அர்ஜுன் தாஸ்

தொடர்ந்து தனது நண்பர் மற்றும் சக நடிகர் அர்ஜுன் தாஸ் குறித்து பேசிய அதிதி சங்கர், "சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன் தாஸின் தீவிர ரசிகையாக அவரை நான் நேரில் சந்தித்தேன்.

ஆனால், இன்று அவருடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இதுவரை கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் அவரது மிரட்டலான வில்லன் நடிப்பையும், கணீரென்ற குரலையும் ரசித்த அத்தனை ரசிகர்களும், வரும் 28-ம் தேதி வெளியாகவிருக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தில் அவரை ஒரு கியூட்டான 'லவ்வர் பாய்' ஆக அனைவரும் ரசிப்பது உறுதி.

அவ்வளவு அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காதலும் எமோஷனும் நிறைந்த ஒரு பக்கா ரொமாண்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ஒன்ஸ்மோர்' திரைப்படம், அதிதி ஷங்கரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியத் திரைப்படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com