'பேட் நியூஸ்' காதல் நகைச்சுவை படம் வெளியீடு எப்போது?

2019- ல் வெளியான நகைச்சுவை படமான 'குட் நியூஸ்' படத்தை போல 'பேட் நியூஸ்' உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த படம் வருகிற ஜூலை 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
'பேட் நியூஸ்' காதல் நகைச்சுவை படம் வெளியீடு எப்போது?
Published on

பிரபல நடிகர்கள் விக்கி கௌஷல், ட்ரிப்டி டிம்ரி, அம்மி விர்க் நடித்த காதல் நகைச்சுவை இந்திப் படம் 'பேட் நியூஸ்'.

இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார். கரண் ஜோஹரின் 'தர்மா புரொடக்ஷன்ஸ்' மற்றும் லியோ மீடியா கலெக்டிவ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தின் 'டைட்டில்' மற்றும் படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

அக்ஷய் குமார், கரீனா கபூர், தில்ஜித் தோசன்ஜ் மற்றும் கியாரா மோத்வானி ஆகியோர் நடித்த 2019- ல் வெளியான நகைச்சுவை படமான 'குட் நியூஸ்' படத்தை போல 'பேட் நியூஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. 'குட் நியூஸ்' படத்தை ராஜ் மேத்தா இயக்கினார்.இதனை கரண் ஜோஹர் 'தர்மா புரொடக்ஷன்ஸ்' சார்பில் தயாரித்தார்.

தயாரிப்பாளர் கரண் முதலில் 3 முன்னணி நடிகர்கள் நடித்த படத்தை தயாரித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது 'பேட் நியூஸ்' படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com