"தி கோட்" OTT வெளியீட்டு தேதி அறிவிப்பு

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
"தி கோட்" OTT வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய்யின் "தி கோட்" (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் வரும் 3-ந்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com