பாலா இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி- ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு

விஜய் சேதுபதி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'இஞ்சி வெல்லம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
விஜய் சேதுபதி- இயக்குநர் பாலா
விஜய் சேதுபதி- இயக்குநர் பாலா
Published on: 
Summary

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீவா சங்கர் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் அல்லது இளையராஜா இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'பத்தா' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பாக்கெட் நாவல்

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'இஞ்சி வெல்லம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இது தவிர தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய கூட்டணி

இந்த சூழலில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி முன்னணி டைரக்டரான பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜீவா சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் அல்லது இளையராஜா ஆகிய இருவரில் ஒருவரை இசையமைப்பாளராக நியமிக்க பாலா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு 'வணங்கான்' படம் வெளியாகி இருந்தது. பாலா -விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com