தளபதி 69 படப்பிடிப்பு களத்தில் விஜய்... ரசிகர்கள் ஆரவாரம் - வைரல் வீடியோ

நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன.
தளபதி 69 படப்பிடிப்பு களத்தில் விஜய்... ரசிகர்கள் ஆரவாரம் - வைரல் வீடியோ
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com