

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக தங்களது திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ரணபலி'.
பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வரலாற்றுப் பின்னணி ஆக்ஷன் திரைப்படம், தற்போது தணிக்கைக் குழுவின் சான்றிதழைப் பெற்று ரிலீசுக்குத் தயாராகியுள்ளது.
இப்படத்தைப் பார்த்த மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவினர், எந்தவொரு காட்சியையும் வெட்ட பரிந்துரைக்காமல் 'ரணபலி' படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
படத்தில் மிரட்டலான சண்டைக் காட்சிகள் மற்றும் தீவிரமான போர்க்களக் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், கதையின் ஆழம் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளைக் கருத்தில் கொண்டு இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இறுதி ஓட்ட நேரம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் எனத் தணிக்கைக் குழுவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு பிரம்மாண்ட வரலாற்றுப் படத்திற்குரிய நேர்த்தியான திரைக்கதையோடு இந்த நீளம் கச்சிதமாக அமைந்துள்ளதாகத் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ரணபாலி' திரைப்படம், ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
1850-களின் பின்னணியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி மற்றும் ராயலசீமா பகுதியில் நடந்த வரலாற்றுப் போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
அஜய்-அதுல் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதால், விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மத்தியில் தியேட்டர் முன்பதிவுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன