

விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பாக்குட்டி படத்தின் முதல் பாடலான ‘அப்பா போல’ வெளியாகி உள்ளது. ஏகாதசி எழுதியுள்ள இப்பாடலை, மீனாக்ஷி இளையராஜா பாடியுள்ளார்.
மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, சித்ரா லட்சுமணன், முருகானந்தம், மூணார் ரமேஷ், பிரவீணா, ஹரிப்ரியா இசை, குமார் நடராஜன், லிசி ஆண்டனி, விஜயன், ஹரிப்ரியா, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்துள்ளார். நவ.6ம் தேதியன்று, தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது. சூர்யாவின் சீன் படமும் நவ.20ம் தேதி வெளியாகிறது.