அடடடடடா.. அப்பப்பா.. அம்மாவை பார்த்ததும் குஷி- க்யூட் வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளன.நயன்தாராவின் ஆவண திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியானது.
அடடடடடா.. அப்பப்பா.. அம்மாவை பார்த்ததும் குஷி-   க்யூட் வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
Published on

2022 ஆம் ஆண்டு பிரபல சினிமா ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளன.

நயன்தாராவின் ஆவண திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியானது. இந்த ஆவண திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி. அவ்வப்போது அவர்கள் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள். தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம்.

 தற்பொழுது விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கமே என்ற பாடலை அவர்களின் மகன்கள் பாடியுள்ளனர்.

குறிப்பாக அதில் இடம் பெற்ற அப்பப்பா, அட அட அடா, என்ற வரிகளை உயிர் மற்றும் உலக் பாடியுள்ளனர். அதை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com