ஈரானிய கிளாசிக் திரைப்படங்களைப் போல் குடும்பஸ்தன் படத்தின் எழுத்தில் எளிமை இருந்தது - பாராட்டிய விக்னேஷ் சிவன்

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'.நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஈரானிய கிளாசிக் திரைப்படங்களைப் போல் குடும்பஸ்தன் படத்தின் எழுத்தில் எளிமை இருந்தது - பாராட்டிய விக்னேஷ் சிவன்
Published on

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'. இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. மணிகண்டன் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதில் அவர் கூறியதாவது " குடும்பஸ்தன் திரைப்படம் பார்த்தேன் மிகவும் பிடித்து இருந்தது. மணிகண்டனின் நடிப்பு மிக அருமையாக இருந்தது. ஒரு கிளாசிக் இரானியன் திரைப்படத்தைப் போல் இப்படத்தின் கதையாக்கம் மற்றும் எழுத்து இருந்தது. நம் அன்றாடம் கஷ்டப்படும் விஷயங்களை மிக அழகாக திரையில் கொண்டு வந்துள்ளனர். கோவை மக்களின் ஸ்லாங், இசை, சவுண்ட் எஃபக்ட்ஸ், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு & படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுகள்.

இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் மிக லாபமாக அமையும். அனைவரும் இப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்.

டைனிங் டேபில் காட்சி மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசும் சிங்கிள் ஷாட் காட்சியின் நடிப்பிற்காகவே மணிகண்டன் தம்பிக்கும் மிகப்பெரிய விருதுகள் கிடைக்கனும்" என பாராட்டியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com